வடமாகாண சபையின் இறுதி அமர்வில் அனந்தியின் அறிவிப்பால் சர்ச்சை!

வடமாகாண சபையின் இறுதி அமர்வில் அனந்தியின் அறிவிப்பால் சர்ச்சை!

இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் விலகுவதாக அறிவித்த விடயம், மாகாண சபை அமர்வில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் அனந்தி சசிதரன் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தான் ஏற்கனவே அங்கம் வகித்துவந்த தமிழரசுக் கட்சியிலிருந்து இடைவிலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் சார்பிலேயே அவருக்கு வடக்கு மாகாணசபை உறுப்பினராகவும், பின்னர் அமைச்சராகவும் பதவிகள் வழங்கப்பட்டன.

அதனை சுட்டிக்காட்டி சபையில் சர்ச்சை ஏற்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், உறுப்பினர்களின் ஒதுக்கீட்டு நிதி விடயங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் உதவியாளர் நியமனங்கள் தொடர்பாகவும் சபையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

வடக்கு மாகாண சபையின் இறுதிநாள் அமர்வு இன்று இடம்பெறுகின்ற நிலையில், வடமராட்சி பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இன்றைய அமர்வை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net