வட. மாகாண சபை மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது!

வட. மாகாண சபை மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது!

வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஐந்தாண்டு காலம் நிறைவடைகின்ற நிலையில், மாகாண சபை எதனையும் செய்யவில்லையென கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் ஐந்து வருட பதவிக்காலம் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகின்ற நிலையில், அது தொடர்பாக நேற்று தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களது கருத்துக்கள், உணர்வுகள், தேவைகள், அபிலாஷைகள் என்பன குறித்து பிரேரிக்கப்பட்டு, சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு, மக்களுக்கு கொடுத்த வாக்குகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.

இதேவேளை, வடக்கு அவைத்தலைவர் என்ற ரீதியில் இதுவரைகாலமும் சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட்டதாகக் குறிப்பிட்ட சிவஞானம், இன்று முதல் அப்பொறுப்பு நிறைவடையும் நிலையில் அரசியல் ரீதியாக இனி சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net