கிளிநொச்சி மாவட்ட முதியோர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட முதியோர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகமும் மாவட்ட முதியோர் சங்கமும் இணைந்து நடத்தும் முதியோர் தினவிழா 26.10.2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரன் தலைமையில் நடைபெற உள்ள நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட மேலதிகச் செயலாளர் சி.சத்தியசீலன் கௌரவ விருந்தினர்களாக கைதடி அரச முதியோர் இல்ல அத்தியட்சகர் தங்கவடிவேல் கிருபாகரனும், கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வே.இறைபிள்ளையும் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தின் மூத்த கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற முதியோர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பும் நடைபெற உள்ளது.

இந்த மாவட்ட விழாவிற்கான நிதி அனுசரணையை வட மாகாண சமூக சேவைகள் திணைக்களம் வழங்கி உள்ளது.

Copyright © 8022 Mukadu · All rights reserved · designed by Speed IT net