தமிழ் மக்கள் மாற்று அரசியலை ஏற்றுக்கொள்வதில்லை!

தமிழ் மக்கள் மாற்று அரசியலை ஏற்றுக்கொள்வதில்லை!

தமிழ் மக்கள் மாற்று அரசியலை இலகுவாக ஏற்றுக்கொள்வதில்லை எனவும் கடந்து காலங்களில் மாற்று அரசியலை மேற்கொண்டவர்கள் உடனடியாக தமிழ் மக்களினால் துாக்கி வீசியெறியப்பட்டமையை வரலாற்றில் காணக்கூடியதாக இருப்பதாகவும் சட்டத்தரணி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அரசியல் தீர்மானம் தொடர்பில் அறிவிப்பதற்காக நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“தமிழ் மக்களுடைய அரசியலை பொறுத்தவரையில் முதலாவதாக தந்தை செல்வா மாற்று அரசியலை தெரிவுசெய்யதார்.

அகில இலங்கை தமிழ் காரங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தமிழரசு கட்சியை ஆரம்பித்த தந்தை செல்வா, தான் எதிர்கொண்ட அடுத்த தேர்தலில் படுதோல்வியடைந்தார். தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் அவரால் தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை.

பின்னர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறிய திரு.நவரட்ணம் அவர்கள் மாற்று அரசியலை தெரிவுசெய்து சுயாட்சிக் கழகத்தை உருவாக்கினார். ஆனால் அவரை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேபோன்று போருக்கு பின்னரான அரசியல் சூழலில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் மாற்று அரசியலை தெரிவுசெய்தனர். அவர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடையமுடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net