பா.ஜ.க.வின் தலைவர்கள் கிங் மாஸ்டர்கள்!

பா.ஜ.க.வின் தலைவர்கள் கிங் மாஸ்டர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகிய இருவரும், கிங் மாஸ்டர்கள் என, மாநிலங்களவை தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இருவரும் ரிங் மாஸ்டர்கள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் தெரிவித்த கருத்திற்கு நேற்று (புதன்கிழமை) பதில் கருத்து வழங்கிய அவர் மேற்படி கூறியுள்ளார்.

பா.ஜ.க.வின் தலைவராக அமித்ஷா பொறுப்பேற்பதற்கு முன்னாள், நான்கு மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியை தாம் பொறுப்பேற்ற பின்னர் 22 மாநிலங்களுக்கு விரிவுபடுத்திய கிங் மாஸ்டர்கள் குறித்த தலைவர்கள் எனக் கூறியுள்ளார்.

அதேபோன்று இன்று காங்கிரஸ் அல்லாத ஒரு ஆட்சியில் மிக தீவிரமாக மக்களுக்காக உழைத்து, மக்களுக்கான நல்ல திட்டங்களையும் கொடுத்து, ஆட்சியை நிறைவு செய்ய முடியும் என்பதை வாஜ்பாயிற்கு அடுத்தபடியாக கிங் மாஸ்டர் மோடி அவர்களே நிறைவேற்றியுள்ளார் என்றார்.

மேலும் குறித்த தலைவர்களுக்கு ரிங்மாஸ்டராக தெரியும் தலைவர்கள் மக்களுக்கு கிங் மாஸ்டர்களே என தமிழிசை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net