விக்கியை விட்டு விலக நினைக்கின்றதா தமிழ்தேசிய மக்கள் முன்னணி?

விக்கியை விட்டு விலக நினைக்கின்றதா தமிழ்தேசிய மக்கள் முன்னணி?

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் ”தமிழ் மக்கள் கூட்டணி” என்ற பெயாில் புதிய கட்சி ஒன்றிணை நேற்று(புதன்கிழமை) ஆரம்பித்துள்ள நிலையில், புதிய கட்சி அறிவிப்புக்கான கூட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாமல் தவிா்த்திருக்கின்றது.

வட மகாண சபையின் முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் முரணப்பாடுகள் வலுத்த நிலையில் அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனியாக கட்சி ஒன்றை உருவாக்கினால் அவருடைய தலமையில் இணைந்து பயணிக்க தயாா் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது.

இதற்கிடையில் முதலமைச்சருடைய கட்சியில் ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியை இணைத்து கொள்வதில் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு உடன்பாடற்ற தன்மை காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் தனது புதிய கட்சி தொடர்பிலான அறிவிப்பினை வெளியிடும் கூட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்வில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றது. குறிப்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி முதலமைச்சருடன் இணைந்து கொள்வதற்கு நிபந்தனைகளை விதித்ததாகவும், அதனால் உண்டான பிரச்சினைகளாலேயே முன்னணி முதலமைச்சாின் கட்சி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

எனினும் இதன் உண்மை தன்மை தொடா்பாக உறுதிப்படுத்த முடியவில்லை.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net