இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெரும் வெற்றி பெறும்!

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெரும் வெற்றி பெறும்!

20 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை சபாநாயகர் உறுதி செய்து இருந்தார். சென்னை உயர்நீதிமன்றமும் நீதி வழங்கி இருக்கிறது. இதனால் தர்மம் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே வெற்றிடமாகவுள்ள 2 தொகுதிகளைச் சேர்த்து இப்போது 20 தொகுதிகள் காலியாகி விட்டது. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் போட்டியிட அ.தி.மு.க. தயாராக இருக்கின்றது.

இந்த 20 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தால் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net