கிளிநொச்சியில் சீரற்ற காலநிலை! மரம் முறிந்து விழுந்ததில் குடியிருப்புக்கு சேதம்!

கிளிநொச்சியில் சீரற்ற காலநிலை காணப்படுகின்றது. அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாவதுடன் பலத்த காற்றும் வீசி வருகின்றது. அத்துடன் கடும் குளிருடனான காலநிலையும் காணப்படுகின்றது.

இன்று காலை மழையுடன் பலத்த காற்று வீசியதால் கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் குடியிருப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

வீட்டின்மேல் ஆலைமரத்தின் பெரியகொப்புகள் இரண்டு முறிந்து விழுந்ததில் குறித் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதன் காரணமாக வீட்டினுள் மழைநீர் சென்றுள்ளதுடுன், மழைநீரினால் பல பொருட்களும் சேதமாகியுள்ளன.

குறித்த வீட்டின் உரிமையாளர் விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான காக்கா என்பவரது என்பது குறிப்பிடதக்கது. குறித்த வீடு தற்காலிக கொட்டகை என்பதால் பலத்த சேதமாகியுள்ளது.

குறித்த மரம் முறிந்து விழுந்த சந்தர்ப்பத்தில் காக்கா என்பவரின் மனைவி மாத்திரமே அங்கு இருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net