நகரின் மத்தியில் உள்ள பள்ளத்தை மூடுமாறு மக்கள் கோரிக்கை

நகரின் மத்தியில் உள்ள பள்ளத்தை மூடுமாறு மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி நகரின் கரைச்சி பிரதேச சபைக்கு முன்னாள் உள்ள பள்ளத்தை மூடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பள்ளத்தில் தேங்கி நிற்கின்ற மழை நீர் மாதக் கணக்கில் தேங்கி நிற்பதோடு, கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுகின்றது என்றும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி அதிகளவு பொது மக்கள், மாணவர்கள் பயன்படுத்துகின்ற வீதியாகவும், மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை, உணவகங்கள் என்பன காணப்படுகின்றன.

எனவே குறித்த பள்ளத்தினால் அங்கு தேங்கி நிற்கின்ற நீர் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன. எனவும் பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © 0151 Mukadu · All rights reserved · designed by Speed IT net