படிக்கவில்லை என்ற காரணத்திற்காக 6 வயதுச் சிறுவன் மீது மாமன் வயரினால் தாக்குதல்!

படிக்கவில்லை என்ற காரணத்திற்காக 6 வயதுச் சிறுவன் மீது மாமன் வயர் கொண்டு தாக்கியதில் மிகவும் பாதிக்கம்பட்ட சிறுவன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவத்தில் கணேசமூர்த்தி – கினுஜன் , என்னும் கிரிசுட்டகுளம் , கனகராயன்குளம். , பகுதியை சேர்ந்த -06 வயதுச் சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் அற்ற நிலையில் குறித்த சிறுவனை மாமனே கவனித்து வரும் நிலையில் வீட்டில் கல்வி கற்கவில்லை என்கின்ற காரணத்தினால் வயரினால் தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக குறித்த சிறுவனின் உடலில் பலமான அடிகாயங்கள் கானப்படும் நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு குறித்த சிறுவன் வயரினால் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது கனகராயன்குளம் பொலிசார் மற்றும் மாவட்ட சிறுவர் நன்நடத்தை திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net