வவுனியா வர்த்தகர்களுக்கு வரி பொறுப்பல்ல சமூகத்தின் கடமை விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

வவுனியா வர்த்தகர்களுக்கு வரி பொறுப்பல்ல சமூகத்தின் கடமை விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

வவுனியா வர்த்தகர்களுக்கான வழிப்புணர்வுக்கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 5மணிவரையும் ஓவியா விருந்தினர் விடுதியில் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் வர்த்தகர்களின் நன்மை கருதி தமிழ் மொழியில் நடாத்துவதற்கு உள்நாட்டு இறைவரித்திணைக்களத்திடம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரி பொறுப்பல்ல சமூகத்தின் கடமை எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் வரி செலுத்துபவர்கள் வரி செலுத்தாதவர்கள் அனைவருக்குமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்கத்தின் உள்நாட்டு இறைவரி சட்டத்தின் கீழான கொள்கைகள் தொடர்பான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

இதில் கலந்துகொண்டு உங்களது சந்தேகங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் வினாக்களைக் கேட்டுக்கொள்ள முடியும்.

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் உள்நாட்டு இறைவரித்திணைக்களம், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு இதனை முதல் முறையாக தமிழ் மொழியில் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net