ஜப்பான் புறப்பட்டார் இந்திய பிரதமர் மோடி!

ஜப்பான் புறப்பட்டார் இந்திய பிரதமர் மோடி!

ஜப்பானில் இடம்பெறும் 13 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்கும் முகமாக, இந்திய பிரதமர் மோடி ஜப்பான் நோக்கி புறப்பட்டுள்ளார்.

டெல்லியிலிருந்து இன்று (சனிக்கிழமை) ஜப்பான் புறப்பட்டுள்ள மோடி அங்கு இரண்டு நாட்கள் தங்குவார் என்றும், குறித்த உச்சிமாநாட்டில் பங்கேற்பார் என்றும், மத்திய அரசின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாகவும், அதன் போது பல முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரிய தீப கற்பத்தில் தென் கொரியா வட கொரியா இடையேயான பிரச்சினையால், ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடி குறித்து விவாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 4996 Mukadu · All rights reserved · designed by Speed IT net