பா.ஜ.க. யாருக்கு பின்னாடியும் செயற்படவில்லை!

பா.ஜ.க. யாருக்கு பின்னாடியும் செயற்படவில்லை!

தமிழக அரசு மற்றும் நடிகர் ரஜினிகாந்த் பின்னால் பா.ஜ.க. உள்ளதென கூறும் கருத்துக்கள் பொய்யானவை என, தமிழகத்திற்கான பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.

அத்தோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும் மேல் முறையீடு செய்ய அதிகாரம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக தமிழகத்தின் 2 தொகுதிகளுக்கான தேர்தலை நோக்கிய அரசியல் பயணம் சுடுபிடித்துள்ளது.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு என, தமிழிசை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அ.தி.மு.க. மற்றும் ரஜினிகாந்தின் பின்னால் பா.ஜ.க. செயற்படுகின்றது என எதிர்கட்சிகள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், குறித்த கருத்துக்கள் கேட்டு கேட்டு சலித்து விட்டதாகவும், அவ்வாறு பா.ஜ.க. எவர் பின்னாடியும் செயற்படவில்லை என்றும் தமிழிசை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net