மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வேன்!

மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வேன்!

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு பதவியேற்றுள்ள நிலையில், அவரை டுவிட்டர் மூலம் தனது நண்பன் எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்த, இந்தியாவின் பிரதான கட்சியான பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி , விரைவில் தான் இலங்கைக்கு (கொழும்பு) வருகை தரவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சுப்ரமணியன் சுவாமி இன்று (சனிக்கிழமை), வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். தொலைபேசி மூலம் அவருக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளேன்.

என்னுடன் பேசிய அவர், இலங்கை தமிழர் விவகாரத்தில் அவர்களுடன் கலந்தாலோசித்து தகுந்த தீர்வை எடுக்கப் போவதாக கூறியுள்ளார்.

மிக விரைவில் இலங்கைக்கு செல்லும் நான், இந்தியாவின் தமிழக மீனவர்கள் எல்லைப் பிரச்சினை தொடர்பில் பேசி, அதற்காக தீர்வொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்” என சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net