யாழ்ப்பாண தமிழர்களின் கனவை மைத்திரி குழி தோன்றி புதைத்துவிட்டார்!

யாழ்ப்பாண தமிழர்களின் கனவை மைத்திரி குழி தோன்றி புதைத்துவிட்டார்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஹ்ஷவை ஒரே இரவில் பிரதமராக்கியதன் மூலம், யாழ்ப்பாண தமிழர்களின் எதிர்கால கனவை, ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன குழி தோன்றி புதைத்துவிட்டதாக, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு இன்று (சனிக்கிழமை) வழங்கிய, பிரத்தியேக கருத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தான் இலங்கைக்கு விஜயம் செய்த போது,

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன கூறிய கருத்துக்கள் மற்றும் தமிழர் வாழ் பிரதேசங்களின் மாற்ற நிலமைகள் மகிழ்ச்சியளித்ததாகவும், ஆனால் தற்போது அந்த ஒளிமயத்தை சிதைக்கும் வகையில், அரசியலில் இவ்வாறானதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும், இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் உள்நாட்டு விடயம் தொடர்பில் பேசுவது தவறு என்றாலும், அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற ரீதியில் கவலையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தும் அதிகாரம் தமக்குள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்களின் வெறுப்புரியவராக முத்திரை குத்தப்பட்ட மஹிந்த ராஜபஹ்ஷவை பிரதமராக்கியுள்ளமை, தன்னை ஜனாதிபதியாக்கிய தமிழ் மக்களுக்கு, மைத்திரபால ஸ்ரீசேன செய்யும் துரோகம் என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த அரசியல் மாற்றமானது, இலங்கை தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்திய தமிழர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net