இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு தடை!

இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு தடை!

இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பாகிஸ்தானிலுள்ள உள்நாட்டு ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்புவது தொடர்பில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழைக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி சகிப் நிசார், இந்தியாவின் அலைவரிசைகளுக்கு தடை விதித்தால் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net