கிளிநொச்சியில் புதிய பிரதமரை வரவேற்கும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள்

கிளிநொச்சியில் பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் புதிய பிரதமரை வரவேற்கும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இன்று பிற்பகல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் க.ஜெயகுமாரன் அவர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது பட்டாசுகள் கொழுத்தி தமது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், பொங்கலும் பரிமாறப்பட்டது.

இதன்போது கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

Copyright © 4249 Mukadu · All rights reserved · designed by Speed IT net