டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார்!

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார்!

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா உடல் நல சுகயீனம் காரணமாக தனது 82ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சு வலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதலமைச்சராக செயலாற்றியதுடன் கடந்த 2004ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ஆளுநராகவும் கடமை புரிந்துள்ளார்.

இவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net