மஹிந்த முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்பட மாட்டார்!

மஹிந்த ராஜபக்ஷ முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்பட மாட்டார்!

இலங்கையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நான் வரவேற்கவில்லை.

ஆனால் அவர் முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்படமாட்டாரென நம்புகின்றேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த பிரதமராக வந்துள்ளமையால் அவர் தமிழர்களுக்கு நன்மை செய்யமாட்டார் என்று யாரும் எண்ண வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகளின் அரசியல் விவகாரத்தில் தலையீடு செய்வது சிறந்ததில்லையெனவும் கமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் போட்டியிடுவோமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 6341 Mukadu · All rights reserved · designed by Speed IT net