இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரியுங்கள்!

இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரியுங்கள்: ஜப்பானில் மோடி!

இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானிய தொழிலதிபர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, இன்று ஜப்பானிய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான சந்திப்பிலேயே, இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியா-ஜப்பான் இடையிலான 13 ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றார்.

தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெறும் இரு தரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பற்கு முன்னர் மோடி, ஜப்பானிய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பினையடுத்து, உரையாற்றிய மோடி, ‘இந்தியாவுடன் இன்னும் அதிகமாக வர்த்தகத்தில் ஈடுபடுமாறும், சர்வதேச அளவில் இந்தியா சிறந்து விளங்க ஜப்பானிய தொழில்துறை தலைவர்களின் ஈடுபாடு உதவும் என்றும் தெரிவித்தார்.

Copyright © 6659 Mukadu · All rights reserved · designed by Speed IT net