சுவாமிநாதனின் அமைச்சுப்பதவி டக்ளஸிற்கு!

சுவாமிநாதனின் அமைச்சுப்பதவி டக்ளஸிற்கு!

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துசமய விவகாரங்கள் அமைச்சராக இருந்த டி.எம்.சுவாமிநாதனின் அமைச்சுப்பதவி டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்றது.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகாரங்கள் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

Copyright © 5224 Mukadu · All rights reserved · designed by Speed IT net