இலங்கை அரசியல் மாற்றத்திற்கு இந்திய அரசு காரணம் இல்லை!

இலங்கை அரசியல் மாற்றத்திற்கு இந்திய அரசு காரணம் இல்லை!

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு இந்திய அரசு காரணம் இல்லையென தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், திருநின்றவூரில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார்.

இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு போர் குற்றவாளியென முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய நிலைப்பாடு தான் தற்போதைய எடப்பாடி தலைமையிலான அரசாங்கத்துக்கும் உள்ளதென அவர் குறிப்பிட்டார்.

அந்தவகையில் இலங்கையில் நடைபெறுகின்ற பிரச்சினைகளுக்கு ஒருபோதும் இந்தியா காரணமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே நம்புகின்றோம் எனவும் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்கள் எம்முடன் இணைந்து கொள்வதினை நாம் வரவேற்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net