கூகிள் தேடு பொறியில் இன்னமும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே!

கூகிள் தேடு பொறியில் இன்னமும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே!

கூகிள் தேடு பொறியில் இன்னமும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையே ஏற்றுக் கொண்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிடும் போது அவர் இதணை குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையின் பிரதமர் யார் என்பது தான் தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இப்படியான பிரச்சினை ஒன்று வந்தால் கூகிளில் தான் நான் தேடுவேன். நாங்கள் கூகிளில் கேட்டு பார்ப்போம்” என ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

தனது கையடக்க தொலைபேசியை எடுத்த ரஞ்சன் (Who is the prime minister of Sri Lanka – Ranil Wicramasinghe is the prime minister of Sri Lanka) இலங்கையின் பிரதமர் யார் என வினவியுள்ளார்.

அதற்கு இலங்கையின் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என கூகிள் குறிப்பிட்டுள்ளது.

“எங்களுக்கு தெரியவில்லை. இன்னமும் உலக பிரஜை இதனை இன்னமும் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. எனினும் கூகிள் இப்படி தான் கூறுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net