வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சிவஞானசோதி நியமனம்!

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சிவஞானசோதி நியமனம்!

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளராக வீ.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட 12 அமைச்சரவை அமைச்சுகளுக்கான செயலாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு

  • ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு
  • டி.எம்.ஏ.ஆர்.பி.திசாநாயக்க – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்
  • ஆர்.பீ.ஆரியசிங்க – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
  • எல்.பீ.ஜயம்பதி – துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சு
  • கே.டி.எஸ்.ருவன்சந்ர – விவசாய அமைச்சு
  • கலாநிதி பி.எம்.எஸ்.படகொட – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சு
  • பத்மசிறி ஜயமான்ன – கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு
  • எச்.டி.கமல் பத்மசிறி – மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
  • வீ.சிவஞானசோதி – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு
  • எம்.எம்.பீ.கே.மாயாதுன்ன – மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சு
  • திருமதி. எஸ்.எம்.மொஹமட் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு
  • எஸ்.ஹெட்டியாரச்சி – சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சு
    ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net