ஆட்டோ டிரைவரை நடுரோட்டில் இழுத்து போட்டு அடித்த பெண்!
மதுரையில் ஃஷேர் ஆட்டோ ஒட்டுனரை நடுரோட்டில் பெண் ஒருவர் சட்டையை பிடித்து அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து தெற்கு வாசல் பகுதிக்கு செல்ல ஷேர் ஆட்டோவில் பெண் ஒருவர் ஏறியுள்ளார். ஆட்டோ ட்ரைவர் 15 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளார்.
பெண் தன்னிடம் இருந்து 20 ரூபாய் நோட்டை கொடுத்து மீதி சில்லறை கேட்டுள்ளார்.
இதை தொடர்ந்து உங்கிட்ட சில்லறை இல்லையா? சில்லறை இல்லா ஏன் வர்ற என அந்த பெண்ணை ஆட்டோ ட்ரைவர் ஆபாசமாக பேசி அவமரியாதை செய்து அநாகரீமாக நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் அந்த ஆட்டோ டிரைவரின் சட்டையை பிடித்து மூஞ்சியில் ஒரு குத்து விட்டுள்ளார்.
மேலும் அவரை சரமாரியாக கேள்வி கேட்க ஆட்டோ ஓட்டுனர் தெரியாம சொல்லிட்டேன் விட்ருங்க என கெஞ்ச ஆரம்பித்தார்.
ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனரை நடுரோட்டில் அடிப்பதை பார்த்ததும் அங்கு கூட்டம் கூடியது.
இதை தொடர்ந்து போக்குவரத்து போலிசார் அங்கு வந்து ஆட்டோ ஓட்டுனரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.