அண்ணனுக்காக தீக்குளித்த தங்கை!
அண்ணனுக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மனமுடைந்து தங்கை தீக்குளித்த சம்பவமொன்று தமிழ்நாடு, காஞ்சிபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
காஞ்சிபுரம், பல்லாவரத்தைச் சேர்ந்த சீதாபதி (65) என்பரின் தங்கை சுமதி (60) என்பவரே இவ்வாறு தீக்குளித்து உயிரிழந்தார்.
அண்ணனான சீதாபதிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் எனத்தெரியவந்தது. இதையறிந்த சுமதி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
தனக்கு ஆதரவாக இருந்த அண்ணனுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் மிகவும் மனவேதனையில் இருந்த நிலையில இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி சுமதி தீக்குளித்தார்.
இதன்போது, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுமதியை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அண்ணனுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டதால் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.