வடகிழக்கு பருவமழை ஆரம்பம்! 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை ஆரம்பம்! 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை இன்று(வியாழக்கிழமை) ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான புயல்கள் காரணமாக காற்றின் திசை மற்றும் ஈரப்பதம் குறைந்ததாலும் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகுவதில் தாமதம் ஏற்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) பருவமழை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தம் நிலவுகின்றது.

மேலும் இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகின்றது. டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. சென்னையிலும் 3 நாட்களாக மழை நீடிக்கின்றது.

இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை இன்று(வியாழக்கிழமை) ஆரம்பித்துள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புயலில் 11 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net