தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் சடலமாக மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு,பெரியகல்லாறு பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பெரியகல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய விஜயஸ்ரீ விமலஸ்ரீ என்ற ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புசல்லாவ இந்து தேசிய பாடசாலையின் விளையாட்டு ஆசிரியராக கடமையாற்றிவரும் இவர் புதன்கிழமை விடுமுறையில் வீட்டிற்கு திரும்பிய இவர் வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

நிதி பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Copyright © 0866 Mukadu · All rights reserved · designed by Speed IT net