13 வரு­டங்­களின் பின் விடுதலையான அரசியல் கைதி!

13 வரு­டங்­களின் பின் விடுதலையான அரசியல் கைதி!

லக்ஷ்மன் கதிர்­காமர் கொலை வழக்கில் இரண்டாம் எதி­ரி­யான இசிதோர் ஆரோக்­கி­ய­நாதன் கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி பிரதீப் ஹெட்­டி­யா­ரச்­சி­யினால் நேற்­றைய தினம் விடு­தலை செய்­யப்­பட்டார்.

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை சோ்ந்த தற்­பொ­ழுது மர­ண­ம­டைந்­துள்­ள­வர்­க­ளான வேலுப்­பிள்ளை பிர­பா­கரன், பொட்­டு­அம்மான் அல்­லது சிவ­சங்கர் வினோதன் அல்­லது சாள்ஸ் மாஸ்டர், கோமதி மதி­மே­க­லா­ஆ­கி­யோ­ருடன் இணைந்து சதி செய்து முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சா லக்ஸ்மன் கதிர்­கா­மரை கொலை செய்­த­மைக்கு உடந்­தை­யாக செய்ற்­பட்­ட­தாக பயங்­க­ர­வாதச் தடைச்­சட்­டதின் கீழ் சகா­தேவன், இசிதோர் ஆரோக்­கி­ய­நாதன் ஆகிய இரு­வ­ருக்கும் எதி­ராக பயங்­க­ர­வாதத் தடை சட்­டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதி­மன்றில் ஐந்து குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டு 2008 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது்.

இரண்டாம் எதி­ரி­யான இசிதோர் ஆரோக்­கி­ய­நா­த­னுக்கு எதி­ராக மேல் நீதி­மன்­றத்தில் சட்­டமா அதி­ப­ரினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது அரச தரப்பில் 15 பேர் சாட்­சி­ய­ம­ளித்­தனர்.

மேலும் அரச தரப்பில் இரண்டாம் எதி­ரியால் வழங்­கப்­பட்ட குற்­ற­ஒப்­புதல் வாக்கு மூலம் நீதி­மன்­றினால் உண்மை விளம்பல் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு அவ் வாக்கு மூலம் சுய­மாக வழங்­கப்­ப­ட­வில்லை.

எனவே அதனை அரச சான்­றாக எடுத்துக் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தென மேல் நீதி­மன்றம் 03.10.2018 அன்று நிரா­க­ரித்த நிலையில் இந்த வழக்கு நேற்­றைய தினம் மேல­திக விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இதன்­போது எதி­ரியின் தரப்பில் ஆஐ­ரான சிரேஸ்ட சட்­டத்­த­ரணி கே.வி . தவ­ராசா தனது வாதத்தில், இந்த வழக்கில் அரச தரப்பில் காலஞ் சென்ற முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்­கா­மரின் பாது­காப்பு பிரிவைச் சேர்ந்த படை­யி­னரும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­வர்­களும் அரச தரப்பில் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர்.

ஆனால் அவர்­க­ளு­டைய சாட்­சி­யங்­களில் இரண்டாம் எதி­ரிக்­கெ­தி­ராக எந்­த­வித சான்­று­களும் முன்­வைக்­கப்­ப­டா­தது மட்­டு­மன்றி இந்த சாட்­சி­யங்­களில் உள்ள பல முரண்­பா­டு­க­ளையும் நீதி­மன்றின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தி­ருந்தார்.

மேலும் தனது வாதத்தில், இந்த கொலை சம்­பவம் அதி­யுட்ச பாது­காப்பு வலை­யத்தில் நடந்த போதிலும் நேர­டி­யான கண்­கண்ட சாட்­சி­யங்ளோ சூழ்­நி­லைச்­சான்­று­களோ அரச தரப்­பினால் இந்த வழக்கில் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என்­ப­துடன் அரச தரப்பால் முக்­கிய சான்­றாக முன்­வைக்­கப்­பட்ட ஒரே சான்­றான குற்ற ஒப்­புதல் வாக்கு மூலமும் இந்­நீ­தி­மன்­றத்தால் நிரா­க­ரிக்­கப்­பட்ட நிலையில் இரண்டாம் எதி­ரியை விடு­தலை செய்­யு­மாறு கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்­பி­ன­ரதும் வாத பிர­தி­வா­தங்­க­ளை­ய­டுத்து கொழும்பு மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி பிரதீப் ஹெட்­டி­யா­ராட்சி சிரேஸ்ட சட்­டத்­த­ரணி கே. வி. தவ­ரா­சாவின் சட்ட வாதத்தை ஏற்று இரண்டாம் எதிரியான ஆரோக்கியநாதனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் சிரேஸ்ட அரச சட்டவாதி மொகமட் நவாவி ஆஜரானதுடன் இரண்டாம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி செல்வி தர்மஐா தர்மராஐாவின் அனுசரனையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே .வி தவராசா ஆஜரானார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net