மாவீரர்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்!

மாவீரர்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்!

மாவீரர்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழர்கள் இந்த மண்ணிலே ஓர் இலட்சியம் நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் வேங்கைகளை விதை ஆக்கியவர்கள் நாங்கள்.

இலங்கையில் இருக்கின்ற எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களும் தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ரணில் விக்கிரமசிங்க ஆனாலும் சரி மஹிந்த ராஜபக்ஷ ஆனாலும் சரி எமது இனத்தை எந்த வகையிலும் அடக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

எமது கட்சியினுடைய தலைவர் இரா சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவிடம் சென்று எங்கள் உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகளை எழுத்து மூலம் தந்தால் எமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலாம் என தெரிவித்த போதிலும் அதனை மறுத்து விட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் பயணத்தை கொண்டு செல்கிறது அதனை அடைவதற்காக முயற்சி செய்கிறது.

நாம் வாழவேண்டும் என்பதற்காக தன்னுடைய இன்னுயிர்களை ஈகம் செய்த அந்த மாவீரர்களுக்கு ஒருபோதும் நாம் துரோகம் இழைக்க மாட்டோம்“ என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net