வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருவருக்கு மரணதண்டனை!!
கடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முல்லைத்தீவு பகுதியில் அரசியல்கட்சியின் அலுவலகம் ஒன்றில் ஒரேகட்சியை சேர்ந்தவர்களிற்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் இராசையா சுரேஸ் என்பவரை தாக்கி கொலை செய்தகுற்றத்தில் எதிரிகளாக பார்க்கப்பட்ட இருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றால் மரணதண்டனை விதித்துள்ளது.
குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தநிலையில் மேலதிகவிசாரணைகளிற்காக 2017ம் ஆண்டு ஐந்தாம் மாதம் ஒன்பதாம் திகதி சட்டமாஅதிபர் திணைக்களத்தினால் வவுனியாமேல் நீதிமன்றில் எதிரிகளிற்கெதிரான குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல்செய்யபட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
வழக்கில் முதலாம் எதிரியாக வள்ளிபுணம் பகுதியை சேர்ந்த காளிமுத்து சிவராசாவும் இரண்டாம் எதிரியாக முனியாண்டி தாயாபரனும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
அவ்விருவரையும் குற்றவாளியாக அவதானித்த நீதிமன்று அவர்களிற்கு மரணதண்டனை வழங்கி தீர்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
வழக்கு தொடுநர்தரப்பில் அரசசட்டவாதி ஜ.எம்.எம் பாகில் வழக்கை நெறிப்படுத்தியிருந்தார்.