காதலை ஏற்க மறுத்ததால் மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்!

காதலை ஏற்க மறுத்ததால் மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்!

காதலை ஏற்க மறுத்ததால் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த ஆசிரியரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஆந்திராவில் இடம்பெற்ற இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம் குர்நூல் மாவட்டத்திலுள்ள தனியார் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவரும் சங்கர் என்பவரே இவ்வாறு கொலைசெய்ய முயற்சித்தார்.

இச்சம்பவம் (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆசிரியர், அதே பாடசாலையில் கல்விகற்கும் 9 ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. ஆனால் அந்த மாணவி ஆசிரியரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சங்கர் மது போதையில் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த மாணவியின் கழுத்தை கத்தியை கொண்டு அறுத்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் வேகமாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதேசமயம் அங்கிருந்து தப்ப முயன்ற குற்றவாளி சங்கரை பிடித்து கட்டி வைத்து அடித்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net