வடக்கு, கிழக்கில் மழை பெய்வதற்கான சாத்தியம்!
வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.