வவுனியாவில் காரில் கஞ்சா கடத்திச் சென்ற மூவர் கைது!

வவுனியாவில் காரில் கஞ்சா கடத்திச் சென்ற மூவர் கைது!

வவுனியா ஓமந்தை பகுதியில் காரில் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை பொலிஸார் இன்று பகல் கைது செய்துள்ளனர்.

ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் ஆலோசனையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பொன்சேகாவின் நெறிப்படுத்தலில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஷ் த டிசில்வா தலைமையில் ஏ 9 வீதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி காரில் 1 கிலோ 126கிராம் கேரளா கஞ்சாவினை எடுத்துச்சென்றவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரும் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 24, 28, 29 வயதுடையவர்கள் ஆவர்.

மூவரையும் அவர்கள் பயணித்த காரையும் பொலிஸார் தடுப்பு காவலில் வைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net