வவுனியாவில் போலி நாணயத்தாள்களுடன் இளைஞன் கைது!

வவுனியாவில் போலி நாணயத்தாள்களுடன் இளைஞன் கைது!

வவுனியாவில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இளைஞர் ஒருவரை நேற்று மதியம் 2 மணியளவில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் ஆலோசனையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.எம். தென்னக்கோனின் நெறிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராய்ச்சி தலைமையில் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியா, தேக்கவத்தை பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 5000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இரண்டு இலச்சத்து 50 ஆயிரம் பெறுமதியான 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கன் கைப்பற்றப்பட்டன.

இதனை உடமையில் வைத்திருந்த புத்தளம், மதுரங்குளி, ஜின்னாவத்தை பகுதியைச் சேர்ந்த முகமட் சப்ராஸ் (வயது 24) என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Copyright © 7364 Mukadu · All rights reserved · designed by Speed IT net