கிளிநொச்சி விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

கிளிநொச்சி விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

கிளிநொச்சி பரந்தன் ஏ-35 வீதியில் இன்று (05-11-2018) இடம் பெற்ற வீதி விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்ன் ஏ-35 வீதியில் பரந்தன் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்றுடன் பின்னால் வந்த மோட்டார் சையிக்கிள் மோதி விபத்துக்குள்ளனது.

இதன் போது மோட்டார் சயிக்கிளைச் செலுத்திச் சென்ற 15வயதுடைய சிறுவனும் அவனுடன் மோட்டார் சையிக்கிளில் பயணித்த மற்றுமொரு சிறுவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இன்று பகல் 10 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net