முல்லைத்தீவில் வவுனிக்குளம் நீர்ப்பாசனத்தில் 9632 ஏக்கரில் நெற்செய்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் தினைக்களத்தின் கீழுள்ள குளங்களின் கீழ் இவ்வாண்டு ஒன்பதாயிரத்து 632 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.விகர்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கேட்ட போது முல்லைத்தீவு மாவட்டத்தின் நீர்ப்பாசனத்தினைக்களத்தின் கீழ் உள்ள வவுனிக்குளத்தின் கீழ் ஐயாயிரத்து 500 ஏக்கர நிலப்பரப்பிலும்.

அம்பலப்பெருமாள்குளத்தின் கீழ் 559 ஏக்கரிலும் கோட்டைகட்டியகுளத்தின் கீழ் 376 ஏக்கரிலும் தென்னியங்குளத்தின் கீழ் 647 ஏக்கரிலும் மருதங்குளத்தின் கீழ் 213 ஏக்கரிலும் ஐயன்கன்குளத்தின் கீழ் 891 ஏக்கரிலும் தேறாங்கண்டல்குளத்தின் கீழ் 292 ஏக்கரிலும் மல்லாவிகுளத்தின் கீழ் 299 ஏக்கரிலும் கல்விளானகுளத்தின் கீழ் 496 ஏக்கரிலும் பழையமுறிகண்டிகுளத்தின் கீழ் 359 ஏக்கரிலுமாக மொத்தம் ஒன்பதாளிரத்து 632 ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இதே வேளை ஏனைய சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழுள்ள பயிர்ச் செய்கை நிலங்கள் மானாவாரி நிலங்கள் ஆகிய வற்றிலும் விவசாயிகள் நெற் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

Copyright © 7874 Mukadu · All rights reserved · designed by Speed IT net