கோடிகளில் பேரம் பேசுபவர்கள் தற்போது எதை கேட்டாலும் கொடுப்பார்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிகளில் பேரம் பேசுபவர்கள் தற்போது எழுத்துமூலம் எதைக் கேட்டாலும் கொடுப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு இதுவரையில் ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கூட்டமைப்பு நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கே ஆதரவாக செயற்பட்டு வருவதாக எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டார்.