தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோயிலில் விசேட வழிபாடு!
இந்துக்களின் திருநாளான தீபாவளி பண்டிகை இலங்கையிலும் மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஆலயங்களில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
அந்த வகையில் வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
அத்துடன், வடக்கின் குறிப்பாக தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், கிளிநாச்சி கிருஷ்ணர் ஆலயம், நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் முதலானவற்றிலும் திருகோணமலையில் திருகோணேஸ்வரம், ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், மன்னார் திருக்கேதீஸ்வரம், வவுனியா நரசிங்கர் ஆலயம் முதலானவற்றில் பல சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.