உத்தரவை மீறி வெடிவெடித்ததில் 1534 பேர் மீது வழக்குத்தாக்கல்!
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி நாளில் வெடி வெடித்ததாக இன்று(புதன் கிழமை) காலையிலிருந்து 1534 பேர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறித்த உத்தரவை மீறி மற்ற நேரங்களில் வெடி வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை கிடைக்கும் என பொலிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தது.
இந்த உத்தரவை கருத்தில் கொண்டு ஒரு சில பகுதிகளில் மட்டும் வெடிகள் வெடிப்பதை மக்கள் தவிர்த்தனர். பெரும்பாலான பகுதிகளில் காலை முதல் இரவு வரை வெடிகள் வெடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உத்தரவை மீறி வெடி வெடித்ததாக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில், நெல்லை, மதுரை, தஞ்சை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் 219 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.