காட்டுயானை தாக்குதலில் குடும்பஸ்தர் பலி!
அம்பாறை மாவட்டம் பொத்துவில் தாராம்பளை பகுதியில் காட்டுயானை தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
நூறானிய்யா வீதி, பொத்துவில் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய அலியார் அபூசாலி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விவசாயம் செய்ய வயலுக்கு சென்ற நபர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்.
தற்போது இவருடைய சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலதிக விசாரணைகளை பொதுவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.