கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது கேதாரகௌரி விதரம்.

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது கேதாரகௌரி விதரம்.

கடந்த இருபத்தொரு நாட்கள் விரதம் இருந்து இன்றைய தினம்(07) காப்பு கட்டி நிறைவுற்றது கேதார கௌரி விரதம்.

கிளிநொச்சியில் உள்ள பல ஆலயங்களில் குறிப்பாக அம்மன் ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்று நிறைவுற்றது இவ்விரதம்.

இவ் விரதத்தை ஆண் பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர்.

மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர்.

மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிக்கின்றனர்.

கிளிநொச்சியில் பெருமளவான பெண்களும் மற்றும் ஆண்களும் இன்றைய தினம் பக்தி பூர்வமாக விரதத்தின் இறுதி நாளான இன்ற காப்பு கட்டி நிறைவு செய்துள்ளனர்.

Copyright © 8592 Mukadu · All rights reserved · designed by Speed IT net