கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 19.8 அடியாக உயர்வடைந்துள்ளது.
அண்மை நாட்களாக நாட்டில் நிலவும் பருவபெயற்சி மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்த வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பெரும் நீர்பாசண குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்த வருகின்றது. குளத்தின் நீர்மட்டம் இன்று அதிகாலைவரை 19.8 அடியாக பதிவாகியுள்ளது.
குளத்திற்கு அதிக நீர் தற்போதும் வருகை தருவதாக அறிய கிடைத்துள்ளதாகவும், குளம் அபிவிருத்தியின் ஊடாக அதிக நீர் தேக்கும் வகையில் தற்போது தயாராக உள்ள நிலையில், 22 அடிவரை நீர் உயர்ந்தால் இவ்வருட காலபோகத்தினை 22 ஆயிரம் ஏக்கர்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்தும் நீர் வருகை தருவதாலும், மேலும் மழைவீழ்ச்சி கிடைக்கும் என்பதாலும் குளத்தின் வான் கதவுகள் திறக்கலாம் எனவும் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் விவசாயிகள் சார்பில் இரணைமடு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்