கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்
கிளிநெச்சி மாவட்ட சைவத்தியசாலையில் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வைத்திய கலாநிதி தங்கராஜா காண்டீபன் அவர்கள் இன்று (07.11.2017) கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் நீண்ட கால இடைவெளியின் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையேற்ற நிரந்தரப் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் புனித பரியோவான் கல்லூரியின் பழைய மாணவரான வைத்திய கலாநிதி த. காண்டீபன் தமது மருத்துவக் கல்வியை யாழ்ப்பாண மருத்துவபீடத்திலும், மருத்துவ முதுமாணிக் கற்கை நெறியினை கொழும்பு மருத்துவபீடத்திலும் பூர்த்திசெய்துள்ளார்.
இவர் அரச வைத்தியர் சங்கத்தின் வடமாகாண ஒருங்கிணைப்பாளராக இருந்து வடமாகாண வைத்தியசாலைகளில் நிலவிய வைத்தியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு பெரும்பங்காற்றியவர் ஆவர்.