சம்பந்தனின் கருத்தை நிராகரித்த சிவசக்தி ஆனந்தன்!
நாடாளுமன்றத்தில் தாம் தொடர்ந்தும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராகவே செயற்படப்போவதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளிதழுக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், மஹிந்தவின் பிரதமர் பதவி அரசியலமைப்புக்கு விரோதமானது என்றுக்கூறும் சம்பந்தனின் கருத்தை ஆனந்தன் நிராகரித்துள்ளார்.
இதேவேளை, முக்கியமான இந்த அரசியல் சூழ்நிலையில் கூட சம்பந்தனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றும் ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.