மணிப்பூரில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

மணிப்பூரில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

மணிப்பூரில் இன்று(புதன் கிழமை) 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சண்டெல் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன.

இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்குள்ளாகும் மாநிலங்களில் மணிப்பூர் மாநிலமும் அடங்கும். இதனைத் தொடர்ந்து மாநில தலைநகர் இம்பாலில் லேசான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், சாண்டெல் பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் நிலநடுக்கமென்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்துள்ளன.

எனினும், பெரிய அளவில் பாதிப்போ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதேபோன்று சாண்டெல் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகித 3.2 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 3.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இம்பாலில் ஜூன் 19ஆம் திகதியும் 4.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் சுராசந்த்பூர் மாவட்டத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net