வெகுவாக கடலரிப்புக்குள்ளாகும் யாழ். நெடுந்தீவு!

வெகுவாக கடலரிப்புக்குள்ளாகும் யாழ். நெடுந்தீவு!

யாழ்.நெடுந்தீவு, கிழக்கு கரையோரப்பகுதிகள் வெகுவாக கடலரிப்புக்குள்ளாகி வருவதனால் கரையோர வீதிகள், குடியிருப்புக்கள் பாதிக்கப்படுவதாக கரையோர மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.நெடுந்தவு பிரதேசத்தின் கிழக்கு கரையோரப்பகுதிகள் மிக வேகமாக கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

இதனால் கரையோர வீதி முழுதாக சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதுடன், வழிபாட்டு இடங்களும் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது.

தற்போது பிடாரி அம்மன் கோயில் முதல் காள்வாய் முனை வரைக்குமான பகுதிகள் இவ்வாறு கடலரிப்புக்கு உள்ளாகி வருவதாவும் இதனால் கரையோரப்பகுதிகளில் வாழும் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொள்வதாகவும் இதனால் கடற்தொழில் உபகரணங்களையும் மீன்பிடி வள்ளங்களையும் பாதுகாப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இப்பகுதிகளுக்கு கடலரிப்பு தடுப்பு அணைகளை அமைக்க வேண்டும் எனவும் கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © 1155 Mukadu · All rights reserved · designed by Speed IT net