மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் புதிய காத்தான்குடி-06, அன்வர் பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம். அனீஸ் (வயது 39) என்பரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டு வளாகத்தில் மின் விளக்கு பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்து மின்சாரத்துடன் தொடர்பு வயர் வீட்டு முற்றத்தில் தேங்கிக் கிடந்த மழைநீரில் தொடர்புபட்டு இவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவரை உடனடியாகவே காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியகர்கள் தெரிவித்தனர்.