கிளிநொச்சியில் பலத்த மழை – நீர் நிலைகள் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்ததுடன், மக்கள் குடியருப்புக்களில் வெள்ளம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாளங்களில் பெய்த மழை காரணமாக கிளிநொச்சிக் குளங்களின் வாசிப்பு இரணைமடுக்குளம் 26 அடியாகவும், அக்கராயன் குளம் 19 அடி 4 அங்குலமாகவும் கல்மடுக் குளம் 23 அடி 4 அங்குலமாகவும் கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 01 அங்குலமாகவும் முறிப்புக் குளம் 15அடி 5 அங்குலமாகவும் பிரமந்தனாறுக் குளம் 11 அடியாகவும் குடமுருட்டிக் குளம் 05அடி 01 அங்குலமாகவும் வன்னேரிக்குளம் 10 அடியாகவும் உயர்ந்துள்ளது.
இரணைமடு குளத்தின் நீர்மட்டம் நேற்று 19.8 அங்குலமாக இருந்த நிலையில் இன்று வெகுவாக மட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்
இந்நிலையில் கிளிநொச்சி கனகாம்பிகை குளம் வான்பாய்ந்து வருகின்றமையால் கிளிநாச்சி ஆனந்தபுரம் கிழக்கும் மற்றும் இரத்தினபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் சிலவற்றினுள் வெள்ளம் உட்சென்றுள்ளது. அதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் வாழும் வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பில் கிளிநொச்சியில் உள்ள 7வது காலாற்படையினரால் 11 குடும்பங்களை செர்ந்த 57 பேருக்கான உடனடி உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறுவர்கள், பெண்கள், வயது முதரிந்தவர்கள் தொடர்பில் அவர்களை மீட்பதற்காக விரைந்த படையினர், குறித்த குடும்பங்களிற்கான உடனடி உணவுகளை வழங்கினர்.
இதேவேளை குறித்த பிரதேசங்களில் உள்ள குடும்பங்களை சேர்ந்த சுமார் 200 பேருக்கான மதிய உணவு, குடிநீர், மற்றம் பிஸ்கட் வகைகளை கிளிநொச்சி நகரில் சுயேட்சை குழுவில் போட்டியிலட்டு கரைச்சி பிரதேச சபை உறுப்பினராக தெரிவான தாமோதரம்பிள்ளை ரஜனிகாந் அவர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக வெள்ளத்தால் தாம் பாதிக்கப்படுவதாகவும், முறையான வடிகாண் வசதி இன்மையால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முறையான திட்டமொன்றை வகுத்து தருமாறும் மக்கள் கோருகின்றனர்.
மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைிற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.