மகிந்த பக்கம் தாவிய வியாழேந்திரனுக்கு எச்சரிக்கை விடுக்கும் கூட்டமைப்பு

மகிந்த பக்கம் தாவிய வியாழேந்திரனுக்கு எச்சரிக்கை விடுக்கும் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி, தற்போது பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழேந்திரன் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.

கடந்த மூன்று வருடங்களாக கூட்டமைப்பின் உறுப்பினராகச் செயற்பட்டு வந்த வியாழேந்திரன் அண்மையில் கட்சி தாவி அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றிருக்கின்றார்.

இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள கூட்டமைப்பு அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net